2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கனிமொழி தனக்கு பக்கபலமாக இருந்த தனது குடும்பத்தினர், கட்சி, மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வழக்கில் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு பக்கபலமாக இருந்த எனது குடும்பத்தினர், கட்சி, தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்
2 ஜி வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து தி.மு.க.வும் தனது குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கனிமொழி, தங்களைக் குற்றம்சாட்டியவர்களுக்கும், தாங்கள் சந்தித்த பிரச்சினைகளுக்கும் இது சிறந்த பதிலாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.
நீதி கிடைத்திருப்பதால் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். இது தி.மு.க.வுக்கும், எனது குடும்பத்துக்கும் சிறந்த நாள். எங்களைக் குற்றம்சாட்டியவர்களுக்கும், நாங்கள் சந்தித்த பிரச்சினைகளுக்கும் இது சிறந்த பதிலடியாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.