கனடாவில் உள்ள வீடொன்றில் இளம் பெண் ஒருவர் சடலாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் ரிச்மெண்ட் ஹில் நகரில் உள்ள யோர்க் பகுதியிலிருந்து நேற்று புதன்கிழமை காலை 11 மணியளவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு சென்று பொலிசார் பார்த்த போது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் தொடர்பாக 28 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
பொலிசார் கூறுகையில், கொல்லப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட இளைஞரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என நம்புகிறோம்.
கொல்லப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் இறப்புக்கான காரணத்தை சரியாக சொல்ல முடியும்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது குறித்த தகவல் யாருக்காவது தெரிந்தால் எங்களை அனுகலாம் என கூறியுள்ளனர்