புது விதமான வைரஸ் கிருமி பரவும் என்ற எச்சரிக்கையால் சுவிட்சர்லாந்தில் உள்ள கோழி பண்ணையில் இருந்த 8000 கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
நாட்டின் துர்குயூ மண்டலத்தில் பெரிய கோழி பண்ணை அமைந்துள்ளது. இங்குள்ள கோழிகள் சில திடீரென உயிரிழந்துள்ளது.
இது குறித்து ஆய்வக சோதனை நடத்தப்பட்ட நிலையில், Infectious Laryngotracheitis என்ற வைரஸ் கிருமியால் கோழிகள் இறப்பது உறுதியானது.
வைரஸானது பரவினால் கோழிகள், பூக்கள், மிளகாய் மற்றும் வான்கோழிகளை அது பாதிக்கும் என தெரியவந்தது.
ஆனால் இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
இதன் காரணமாக பண்ணையில் இருந்த 8000 கோழிகளை கொல்ல அதிகாரிகள் முடிவுவெடுத்தார்கள்.
அதன்படி கோழிகள் அனைத்தும் ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த இடம் முழுவதும் கார்பன் டை ஆக்சைடு வாயு செலுத்தப்பட்ட நிலையில் கோழிகள் மயக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அனைத்தும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.