வெலிகட காவற்துறை பிரிவிற்குட்பட்ட நாவலை , ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று நேற்று இரவு காவற்துறையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது 6 பெண்கள் மற்றும் அதன் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
23 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மொனராகலை , தனமல்வில , டயகம மற்றும் பென்தொட போன்று பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், வெலிகடை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.