மர்மமான முறையில் உயிரிழந்த ரொறன்ரோ கோடீஸ்வரரும், மருந்துப் பொருள் வணிகருமான பர்ரி சேர்மன் மற்றும் அவரது மனைவி ஆகியோரது இறுதிச் சடங்கில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
மிசிசாகா மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி சடங்கில் அனைவரும் இருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
75 வயதான பர்ரி ஷேர்மன் மற்றும் 70 வயதான அவரது மனைவி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீடடில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகள் தெரிவித்துள்ள நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பர்ரி சேர்மனால் 1974ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Apotex மருந்து நிறுவனம், தற்போது கனடாவின் மிகப்பெரும் மருந்துப் பொருள் நிறுவனமாக விளங்கி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.