சுவிஸ் நாட்டில் மதிப்பு கூட்டு வரிகள் குறைக்கப்படுவதன் விளைவாக தொடரூந்து கட்டணங்களும் அடுத்தாண்டு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியானது 8லிருந்து 7.7 சதவீதமாக வரும் ஜனவரி முதல் குறைக்கப்படவுள்ளது, இதன் காரணமாக யூன் மாதம் முதல் சுவிஸ் தொடரூந்து பயண கட்டணங்கள் 0.3 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படவுள்ளதாக நாட்டின் பொது போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்கம் செய்யலாமா என கடந்த செப்டம்பர் மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் வாக்காளர்கள் அதை நிராகரித்தனர்.
இதன் காரணமாகவே நாட்டின் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்படவுள்ளது, சுவிஸில் தொடரூந்து பயண கட்டணங்கள் குறைக்கப்படும் அதே வேளையில் ஜேர்மனியில் இந்த மாதம் 2 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல பிரித்தானியாவில் எதிர்வரும் ஜனவரி 2-ஆம் திகதி முதல் 3.4 சதவீதம் தொடரூந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.