பிரித்தானியாவில் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தனது மகன்கள் மகிழ்ச்சியாக வாழ 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி திரட்டிவிட்டு உயிரிழந்துள்ளார்.
நாட்டின் பான்புரி நகரை சேர்ந்தவர் சாம் கைமி (34), இவருக்கு மோட்டர் நியூரான் என்ற விசித்தர நரம்பு மண்டல நோய் இருந்த நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
தான் இறப்பதற்குள் தனது இரண்டு மகன்களான ஜோயி மற்றும் ஹேரியின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் சேர்க்க முடிவெடுத்த சாம் வலைத்தளம் மூலமாக தனது நண்பர்களிடம் நிதி வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
நான் உயிரிழக்கப் போவது குறித்து எனக்கு எந்த வித பயமும் இல்லை, என் மகன்களின் நலன் குறித்து தான் எனக்கு கவலை என வலைதளப் பக்கத்தில் சாம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பல்வேறு நபர்கள் உதவியதன் மூலம் 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி கிடைத்துள்ள நிலையில் சாம் கடந்த வியாழன் உயிரிழந்துள்ளார்.
மகன்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரி பிப்பா ஹ்யூஸுடன் வாழ வேண்டும் என்பதே சாமின் கடைசி ஆசையாகும்.
பிப்பா கூறுகையில், சாம்-ஐ சுற்றி குடும்பத்தினர் இருந்த நிலையில் அமைதியான முறையில் அவர் உயிரிழந்தார்
சாம் உயிரிழந்தது வேதனை அளித்தாலும், அவர் மேலும் துன்பப்படாமல் இறந்தது ஆறுதல் அளிப்பதாக கூறியுள்ளார்.