கொங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.ஸ் இளங்கோவின் பிறந்தநாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
இதில் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட கொங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஸ்பு மேடையில் பேசுகையில்,
டிஜிட்டல் இந்தியாவுக்கு வித்திட்டதே 2ஜிதான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது சுமத்தப்பட்ட வீண்பழி தற்போது நீங்கியுள்ளது.
ஏழு ஆண்டுகள் காங்கிரஸ் மீதும் தி.மு.க மீதும் இருந்த பொய் பிரச்சாரம் நீக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார்.
2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார் என்று கூறினார்.