பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஜுலி தற்போது அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜுலி, அடுத்ததாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.
அதிலும் குறிப்பாக காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஓவியாவை படுத்தியப்பாடு ரசிகர்களிடையே பெறும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சமுகவலைத்தளங்களில் இவரை கேலி செய்யும் மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.
Working with ARUNA Appalam team was really wonderful. Thank u guys…… pic.twitter.com/r4FH1SsJsY
— maria juliana (@lianajohn28) December 23, 2017
தற்போது பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜுலி, சமீபத்தில் அப்பளம் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இதை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.