முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த கீரையில் கால்சியம்இ பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது.
முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிரஇ நார்ச்சத்தும்இ மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால்இ உடல் வலுவடையும்இ வளரும் சிறுவர்களுக்கு இந்த கீரையை தொடர்ந்து கொடுத்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும்.
இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துஇ ரத்தத்தை சுத்தம் செய்துவதோடுஇ இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை அதிமதுரம் (ஒரு துண்டு)இ மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துஇ சேர்த்துஇ மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டுஇ தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்துஇ சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
முளைக்கீரைஇ துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்துஇ சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம்இ பவுத்திர கட்டிஇ ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
முளைக்கீரையுடன் மிளகுஇ சீரகம்இ பூண்டுஇ சின்ன வெங்காயம்இ மஞ்சள் ஆகியவற்றை சேர்த்துஇ கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கிஇ நல்ல பசி உண்டாக்கும்.
முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரைஇ மிளகுஇ மஞ்சள்இ உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.
முளைக் கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரையாகும். இக்கீரையை இளங்கீரை என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
முளைக்கீரை பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும்.
முற்றிய முளைக்கீரையே தண்டுக்கீரையாகும்.
முளைக்கீரையை நன்கு சுத்தமாக அலசி சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம் 1 ஸ்பூன்இ மிளகு 5இ சின்ன வெங்காயம் 4இ பூண்டுபல் 3இ இலவங்கப்பட்டை இவற்றைச் சேர்த்து நீர்விட்டு வேகவைத்து நன்கு கடைந்து சாப்பிடலாம். பொரியலாகவும் சாப்பிடலாம். சூப் செய்தும் அருந்தலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற உணவாகும்.
முளைக்கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து உண்பது நல்லது. இளைத்த உடல் தேறவும்இ தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.
மலச்சிக்கலைப் போக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
நாவிற்கு சுவையைக் கொடுக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
உடல் சூட்டைத் தணிக்கும். கண் எரிச்சலைப் போக்கும். கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.
நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும். இருமல்இ தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
இதில் அதிகளவு கால்சியம்இ இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும். சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மார்புச்சளிஇ தொண்டைச் சளியைப் போக்கும். ஏன் குறிப்பாகஇ சனிக்கிழமைகளில் கீரை சாப்பிட சொல்கிறார்கள். தனிக்காரணம் உண்டா என குழம்ப வேண்டாம். பொதுவாக பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால்இ வீட்டில் பொறுமையாக சமைப்பார்கள்.
மற்ற வேலை நாட்களில் கீரையை ஆய வேண்டுமென்றே ஒதுக்கிவிடுவார்கள். அதனால் சனிக்கிழமைகளில் நிதானமாக கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் பருப்பு சேர்த்து சமைத்து சுடசுட நெய் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.