தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
ஜனவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை முதல் டெஸ்ட்இ ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் மற்றும் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி டிசம்பர் 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஒருநாள் போட்டித் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டித் தொடர் விவரம் பின்வருமாறு:
முதல் ஒருநாள் – டர்பன் – பிப்ரவரி 1
2-ஆவது ஒருநாள் – சென்சூரியன் – பிப்ரவரி 4
3-ஆவது ஒருநாள் – கேப்டவுன் – பிப்ரவரி 7
4-ஆவது ஒருநாள் – ஜொஹன்னஸ்பர்க் – பிப்ரவரி 10
5-ஆவது ஒருநாள் – போர்ட் எலிசபத் – பிப்ரவரி 13
6-ஆவது ஒருநாள் – சென்சூரியன் – பிப்ரவரி 16
இந்திய அணி விவரம் பின்வருமாறு:
விராட் கோலி (கேப்டன்) ரோஹித் ஷர்மா ஷிகர் தவன் அஜிங்க்ய ரஹானே ஷ்ரேயாஸ் ஐயர் மணீஷ் பாண்டே கேதர் ஜாதவ் தினேஷ் கார்த்திக் எம்.எஸ்.தோனி ஹார்திக் பாண்டியா அக்ஷர் படேல் குல்தீப் யாதவ்இ யசுவேந்திர சாஹல் புவனேஸ்வர் குமார் ஜஸ்ப்ரீத் பும்ரா முகமது ஷமி ஷர்துல் தாக்கூர்.