லித்துவேனிய நாட்டின் ஜனாதிபதி டாலியா க்ரிபவ்ஸ்காடி(Dalia Grybauskaitė) பாப்பரசர் பிரான்சிஸ்க்கு மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்கக் கூடிய உலகின் மிகச் சிறிய பாலன் குடில் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
லித்துவேனிய நாட்டின் வில்னியுஸ் பேராலய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலன் குடில் அமைப்பைஇ பத்தாயிரம் முறைகள் சுருக்கிஇ இந்தச் சிறிய குடில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய பாலன் குடில்இ மைக்ரோஸ்கோப்பின் உதவியுடன் பார்க்க முடியும் என்றும்இ இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் அந்நாட்டு அறிவியலாளரும்இமாணவர்களும் மூன்று மாதங்களாக இக்குடிலை அமைத்தனர் என்றும் லித்துவேனிய ஜகாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாப்பரசருக்கு பரிசளிக்கப்பட்ட மேற்படி பாலன் குடில் டுiமெஆநnų கயடிசமையள ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள மூன்று சிறிய குடில்களில் ஒன்றாகும். மேலும் லித்துவேனிய ஜனாதிபதி டாலியா க்ரிபவ்ஸ்காடி அந் நாட்டின் முதல் பெண் அரசுத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வருடம் லித்துவேனியா எஸ்டோனியா லாத்வியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் பரிசுத்த பாப்பரசர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.