யாழ்ப்பானம் மாநகர சபை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாகவும் தனக்கு ஆசனம் வழங்குமாறு ஊடகவியலாளரான என்.வித்தியாதரன் கேட்டது உண்மைதான் எனத் தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளரும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
யாழ்.மாநகர சபை மாத்திரமல்ல எந்த உள்ளூராட்சி சபைகளும் முதன்மை வேட்பாளர் என யாரையும் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவே அந்த நிலைமையில் தனக்கும் மாநகர சபை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என என்.வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்ததாகவும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மறுப்பதற்கு இல்லை என்றும் சி.வி.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.
ஆர்னோல்ட் மாநகர சபை வேட்பாளராக போட்டி இடுவதற்காக அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்து பதவி விலகுகிறேன் என தன்னிடம் கடிதம் கையளிக்கும் போதும் தான் மாநகர சபை வேட்பாளராக போட்டியிட உள்ளதால் தான் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகுவதாக கடிதத்தினை சமர்ப்பித்துள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரைக்கும் எந்த சபைக்கும் முதன்மை வேட்பாளர் என யாரையும் பிரேரிக்க வில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே அது தொடர்பில் கட்சி தீர்மானிக்கும்’ எனவும் அவர் தெரிவித்தார்.