சுவிட்சர்லாந்தின் போர் விமானப் படையில் முதன் முறையாக பெண் விமானி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Saint-Legier-ஐ சேர்ந்த 26 வயது பெண் Fanny Chollet கடந்த 2012ஆம் ஆண்டு தனது விமான போக்குவரத்து பட்டபடிப்பினையும், போர் விமானி பயிற்சியையும் தொடங்கினார்.
தற்போது பட்டம் மற்றும் பயிற்சியை ஒரு சேர முடித்துள்ளார்.
இந்நிலையில் சுவிஸ் விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்,
அடுத்த ஆண்டு விமானத்தில் பறப்பதற்கான பயிற்சியையும் முடித்த பின்னர், அவர் பணியில் அமர்த்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் ஊhழடடநவ-வுடன் சேர்ந்து ஏழு பேர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து Fanny Chollet கூறுகையில், ‘நான் எனது 17வது வயதில் இருந்தே போர் விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அந்த முடிவை நான் எடுத்த பின்னர் அதில் மிகவும் உறுதியாக இருந்தேன், எனக்கு இந்த வேலையை சிறப்பாக செய்ய வேண்டும்.
மேலும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவில் இருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இரட்டை எஞ்சின்களைக் கொண்ட சூப்பர்சோனிக் போர் விமானம், அதிகபட்சமாக மணிக்கு 2000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.