தமிழரசு கட்சி என்றைக்கும் விடுலை புலிகளை எதிர்த்தது இல்லை என அக்கட்சியின் இணை செயலாளரும், வடக்கு மாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பையோ, அல்லது அதன் உறுப்பினர்களையோ என்றைக்கும் தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை என தெரிவித்த சிவஞானம் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் ஆசனம் கேட்டது உண்மை அப்போதைய சூழலில் அதனை வழங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் தேர்தலுக்கு பின்னரான கால பகுதி முதல் தற்போது வரை தாம் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் நெருக்கமாகவே உள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.