வன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ் மனித நேய நடவடிக்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் பிரித்தானிய அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்திருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் பிரித்தானிய அரசிடம் வழங்கப்பட்டுள்ள தவறான யுத்தக் குற்றச்சாட்டுக்களை வைத்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சகோதர ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.