ஆர். கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் ராணி மேரி கல்லூரியில் குறித்த தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.
எனினும் முதற் சுற்று முடிவினைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் மற்றும் அ.தி.மு.க ஆதரவாளர்கள் தரப்பினரிடையே சற்றுமுன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தரப்பினரும்இ அ.தி.மு.க ஆதரவாளர்களும் தர்க்கத்தில் ஈடுபட்டு மோதலிலும் ஈடுபட்டுக்கொண்டனர்.
மோதலின் போது வாக்கு எண்ணிக்கை பணிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதோடுஇ பொலிஸார் மற்றும் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குழப்ப நிலை காரணமாக வாக்குகள் எண்ணும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.