Loading...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
மும்பை மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரசு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு திசர பெரேராவும், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமைதாங்கவுள்ளனர்.
Loading...
ஏற்கனவே முதல் இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெற்றிகொள்வதற்கும், இலங்கை அணி இப்போட்டியிலாவது ஆறுதல் வெற்றிபெற வேண்டுமென்ற நோக்கத்துடனும் களமிறங்கவுள்ளது.
கடந்த இரு ரி-ருவென்ரி போட்டிகளிலும் சாதனை வெற்றிகளை பதிவுசெய்த இந்திய அணி, இன்றும் சாதனை வெற்றியை பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading...