நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச வை-பை வசதி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தும் நோக்கில், இலவச வை-பை வழங்கும் நடவடிக்கையினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கமைய, நாட்டில் புதிதாக 600 இடங்களில் வை-பை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு இலட்சத்து 45 பேர் இணைய சேவையை பெற்றுக் கொள்கின்றனர்.
பொருளாதார டிஜிட்டல் அளவை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் இணைய வசதி வழங்குவது அவசியம் என்பதனாலும், சந்தை மற்றும் கட்டுப்பாடுகளுக்கான தடைகளை அகற்றுவதற்காகவும், இணையத்தை பயன்படுத்தி அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக பொது இடங்களில் வை-பை வசதிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் இலவச வை-பை வசதி வழங்கும் வேலைத்திட்டம் பற்றிய விடயம் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வளமான நாடு 2025 என்ற மாநாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.