நாட்டில் எதிர்ப்பு அரசியல் முறையை மறந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எழுவைத்தீவு மற்றும் அனலைதீவு மக்களின் நலன்கருதி மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எழுதாரகை படகின் பயணத்தை, நேற்றையதினம் (சனிக்கிழமை) வைபவரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
மலையக அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசுடன் இணைந்து தமது பிரதேசங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதாக சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர்
எனினும், வடக்கு மாகாணத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதால் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையேற்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த எதிர்ப்பு அரசியல் நிலைமை மாறி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அனைத்து அன்றாட பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.