வடகொரியாவுக்கு எதிரான ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கு வழிவகுக்கும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புக் சபையில்; கடந்த வெள்ளிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களுக்கு 90 சதவீத அளவுக்கு தடை விதிக்கவும்,
வெளிநாடுகளில் பணியாற்றும் வடகொரியத் தொழிலாளர்களை வெளியேற்ற 24 மாதங்கள் வரை அளிக்கப்பட்ட காலக்கெடுவை 12 மாதங்களாக குறைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகொரிய பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் செயல் என்றும்,
இது கொரிய தீபகற்பத்தில் போருக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.