உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யததான குற்றச்சாட்டில் வெனிசுவேலாவுக்கான கனேடியத் தூதுவர் க்ரீப் கோவலிக், அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்
சில மாதங்களுக்கு முன்னர் வெனிசுவேலாவின் சில அதிகாரிகளுக்கான பயணத் தடையினை கனடா விதித்துள்ள நிலையில், வெனிசுவேலாவின் இந்த தீர்மானத்திற்கு கனடாவின் குறித்த அந்த நடவடிக்கை காரணமாக இருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்தே வெனிசுவேலா அதிகாரிகள் மீதான தடையினை கனடா விதித்திருந்த நிலையில், கனடாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையேயான உறவு கடந்த சிலமாதங்களாகவே சீரற்றுக் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெனிசுவேலாவின் உச்ச அதிகாரம் கொண்ட நாடாளுமன்றில் தலைவரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கனேடிய தூதர் மட்டுமின்றி பிரேசில் தூதரையும் அவ்வாறே வெளியேற்றியுள்ள வெனிசுவேலா அரசாங்கம், பிரேசில் தூதர் சடட்ம் ஒழுங்கினை மீறிச் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.