ஜெருசலேம் தொடர்பாக ஜ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது பக்கசார்பானது என ஐ.நாவுக்கான கனேடிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தினை நிராகரித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலிருந்து, கனடா விலகியமையும் குறிப்பிடத்தக்கது.
ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு 128 நாடுகள் ஆதரவாகவும், 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தமையும் யாவரும் அறிந்ததே
இதேவேளை குறித்த வாக்கெடுப்பில் கனடா உட்பட 35 நாடுகள்; கலந்துகொள்ளாமல் விலகிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பை கொண்டுள்ள கனடா, அமெரிக்காவிற்கு வாக்களிக்க மறுத்துள்ளமை தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையிலேயே ஐ.நாவுக்கான கனேடிய தூதர் ஐ.நா பொதுச் சபைக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தீர்மானம் ஒரு பக்கச் சார்பாக உள்ளமை குறித்து கனடா ஏமாற்றமடைகிறது எனவும் கனடா எதிர்பார்க்கும் அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமையவில்லை எனறும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் இதன் மீதான வாக்கெடுப்பில் கனடா கலந்து கொள்ளவில்லை’ என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.