ஈழத்தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் தொடர்ந்தும் இருக்கும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டிருந்த தினகரன், அங்கு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள், அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பாக தினகரன் ஆழமான கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டுள்ளார்.
அதன்போது, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாசைகளுக்காக இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தினகரன் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
குறித்த கிறிஸ்மஸ் தின விழாவிற்கு பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் சுகயீனமுற்றமமையால் குறித்த பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.