யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் மஞ்சள் கடவையில் கடந்து சென்ற பெண்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே வீழ்ந்து தலை தரையில் அடிபட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து – யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த சகோதர மொழியே சேர்ந்த குழுவினர் நல்லூர் ஆலயத்திற்கு சென்றுவிட்டு நாகவிகாரைக்கு வந்தபோது ஆரியகுளம் சந்தியில் உள்ள மஞ்சள் கோட்டினால் கடந்துவந்துள்ளனர்.
அதன் போது யாழ்ப்பாண நகரிலிந்து திருநெல்வேலி நோக்கி பயணித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார்.
சைக்கிளில் மோதுண்டு விழுந்த குடும்ப பெண் தலை தரையில் அடிபட்ட நிலையில் அங்கிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
மோட்டார் சைக்கிளில் செலுத்தி வந்த இளைஞர் தனது அயல் வீட்டு சிறுவன் ஒருவரை தனியார் கல்வி நிலையத்திலிருந்து ஏற்றிவந்துள்ளார்.
விபத்தின் போது சிறுவன் கீழே விழுந்ததால் கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.