Loading...
கர்ப்பமானதால் ஒராண்டு காலம் ஓய்வில் இருந்த அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், குழந்தை பெற்றெடுத்த பிறகு முதல் முறையாக களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபனில் விளையாட திட்டமிட்டுள்ள அவர்,
அதற்கு முன்னதாக பயிற்சி தேவை என்பதனை கருதி எதிர்வரும் 30ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள கண்காட்சி போட்டி ஒன்றில் விளையாடவுள்ளார்.
Loading...
இப்போட்டியில், பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவை செரீனா வில்லியம்ஸ், எதிர்கொள்கிறார்.
நீண்ட நாள் செரீனாவை டென்னிஸ் களத்தில் காணாத அவரது இரசிகர்கள், செரீனாவின் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.
Loading...