அகதிகளை அரவணைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்குப் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது உரையாற்றிய போப் பிரான்சிஸ், இயேசு கிறிஸ்து பிறக்குமுன் மரியாளும் யோசேப்பும் அடைக்கலம் தேடி அலைந்ததுபோல்,
இப்போதும் லட்சக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடிப் புலம்பெயர்ந்து செல்வதாகக் குறிப்பிட்டார். யாரும் நாட்டைவிட்டுச் செல்ல நினைப்பதில்லை என்றும்,
அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதைப் பற்றிக் கவலைப்படாமல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளும் தலைவர்களால் அவர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுவதாகப் போப் குறிப்பிட்டார்.
அகதிகளை அனைத்து நாடுகளும் அரவணைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அகதிகளிடம் பணம்பெற்றுக்கொண்டு அவர்களை நாடுகடத்துபவர்களுக்கும் போப் கண்டனம் தெரிவித்தார்.