சுவிஸின் பிரபல இசைக்கலைஞர் மீது நான்கு பெண்கள் பாலியல் பலாத்கார குற்றசாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் அவர் முக்கிய இசைக் குழுக்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
லுசர்னே நகரை சேர்ந்தவர் சார்லஸ் டுடோய்ட் (81), பிரபல இசைக் கலைஞரான இவர் பல்வேறு இசைக்குழு கச்சேரிகளை தலைமையேற்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இசைக்குழுக்களை சேர்ந்த 3 பாடகிகள் மற்றும் ஒரு பெண் இசையமைப்பாளரை சார்லஸ் 1985-லிருந்து 2010 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட நால்வருமே இந்த குற்றச்சாட்டுகளை தொலைக்காட்சி பேட்டியில் முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து முக்கிய இசைக்குழுக்களான சான் பிரான்சிஸ்கோ மற்றும் பாஸ்டன் சிம்பொனி இசைக்குழு சார்லஸை தங்கள் குழுவிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த குற்றச்சாட்டில் தீவிரமான தன்மை உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.