அவமானப்படுத்தும் நோக்கிலேயே இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோஹ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது, 1995-96 ஆம் ஆண்டு பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடிய முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பதாகவும் அவர் பந்தை வீசி எறிவதாகவும் அப்போது போட்டி நடுவர்களாக பணியாற்றிய டரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு வேண்டுமென்றே சுமத்தப்பட்டதாக ஸ்டீவ் வோ தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது அவதானிக்கப்பட்டிருப்பின் அவை தொடர்பாக போட்டிக்கு முன்னதாக தெரிவித்திருக்க வேண்டும் என்றும் முரளிதரன் அத்தகைய சூழ்நிலைக்கு முகம் கொடுத்தமையானது வீரர்கள் எதிர்கொள்ளக் கூடாத துரதிஷ்டவசமான நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.