Loading...
எகிப்து நாட்டின் சினாய் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 15 தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர்.
எகிப்து முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்சி வெளியேற்றப்பட்ட பின்னர் அந்நாட்டின் சினாய் பிரதேசத்தில் ஆயுதமேந்திய ஜிஹாதி தீவிரவாதிகள் அரசு மற்றும் அரசுப் படைகளுக்கு எதிரான அதிரடி தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
Loading...
இந்நிலையில், சினாய் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி கொன்ற 15 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இரு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக எகிப்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Loading...