ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை தொடர்வது குறித்து மக்களே முடிவெடுக்க வேண்டுமென சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Doris Leuthard தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலேயே சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சுவிட்சர்லாந்து இடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டு செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இனியும் உறவினை தொடர்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தள்ளார்.
மேலும் தாம் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது, இதற்கு அடிப்படை வாக்கெடுப்பு அவசியம் எனறும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் ஒழுங்குமுறை அவசியமானது எனவும் இதன்மூலம் தாம் இப்போது கண்முன்னே சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே ளுறளைள ளவழஉம நஒஉhயபெநள-யை அனுமதி வழங்கியுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுவிஸ் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியம் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்தே சுவிஸ் ஜனாதிபதியும் பொது வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.