பிரான்ஸில் பல வழக்குகளுக்காக வலைவீசி தேடப்பட்டு வந்த பெண் சிரியாவில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை பயங்கரவாதத்திற்கு தயார் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய பெண் ஒருவரே இவ்வாறு பிரான்ஸில் தேடப்பட்டு வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனது மூன்று குழந்தைகளுடன் சிரியாவில் தஞ்சமடைந்த குறித்த பெண், தற்போது சிரியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அப்பெண்ணிடம் இத்தாலி நாட்டின் குடியுரிமை இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாரிஸ் அரசாங்க சட்டத்தரணி அலுவலகம் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால் அப்பெண் விரைவில் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் தேடப்பட்டு வந்து அப்பெண், துருக்கி-சிரியா எல்லைப்பகுதியில் உள்ள மிலன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.