நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படடதனை தொடர்ந்து 28ஆயிரத்து 685 மில்லின் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் 18ஆயிரத்து 262 மெட்ரின் டொன் மீன் தற்பொழுது ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மீன் பிடி துறை இரு மடங்கு அபிவிருத்தி அடைந்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் ஒன்றரை வருடங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.