ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் மற்றும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.
இதையடுத்தே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வரும் நிலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.