நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனால் எக்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பீர்கள் என குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஓர் அங்கமாகவே போட்டியிடுவதாகவும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார்.
ஆகையினால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவது சாத்தியமற்றது என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.