சுவிஸின் சூரிச் பகுதியில் உள்ள லிம்மட் ஆற்றின் வழியே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடல் மிதந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் உள்ள Höngg நீர் மின் ஆலையின் ஊழியர்கள் அந்த உடலை கண்டெடுத்துள்ளதுடன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் திகதியன்று காலை 11 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட உடலில் எந்த பெரிய காயங்களும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து சரியான தகவல் இல்லாததால் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் டிசம்பர் 23- 25 திகதிகளுக்குள் நடந்த மரணங்களுக்கும் கைப்பற்றப்பட்ட உடலுக்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.