Loading...
கனடாவின் புகழ் பூத்த முன்னாள் ஹொக்கி வீரர் ஜோனி பஃவர், தனது 93வது வயதில் காலமாகியுள்ளார்.
நிமோனியா வைரஸ் நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்றையதினம் உயிரிழந்ததனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி, கனடாவுக்கு பெருமை சேர்த்த அவரின் மரணத்திற்கு, உலக பிரபலங்கள் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Loading...
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி, அதாவது அவரது 90வது பிறந்த நாளான அன்று ரொறொன்ரோ நிர்வாகம் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது
சிறந்த ஹொக்கி விருதான Vezina Trophy விருதை இரண்டு தடவைகள் வென்ற அவர், 475 சாதாரண சீசன்களில் விளையாடியதுடன் நான்கு தடவைகள் Stanley Cups வெற்றிக்கும் வழி வகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...