அடுத்து நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, வடக்கின் தற்போதைய முதலமைச்சர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடபோவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் சார்ந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரெலோ மற்றும் புளட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகவே எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா போட்டியிடபோவதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து தற்போதைய முதலமைச்சர், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.