வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.
கடந்த ஒரு வருடமாக புனர்வாழ்வு பெற்று வந்த மார்க்கண்டு நேவிநாதன் (யாழ்ப்பாணம்), ஆறுமுகம் அருள்பிரகாஸ் (கிளிநொச்சி), பெர்னாண்டோ எமில்தாஸ் (முல்லைத்தீவு) ஆகிய முன்னாள் போராளிகள் மூவரே இவ்வாறு குடும்பத்தினரிடம் சமூகமயமாக்கி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், சர்வ சமயத்தலைவர்கள், புனர்வாழ்வு ஆணையாளர், நாயக்கப்பணிமனையின் அதிகாரி, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டத்தின் பின் இணைப்பு அதிகாரிகள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வன்னி விமானப்படை நிலைய பொறுப்பதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.