கடவுள் பேசுவது தனக்கு கேட்பதாக பெண்ணொருவர் கூறிய நிலையில் அவருக்கு (brain tumour) மூளைக் கட்டி நோய் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த (பெயர் குறிப்பிடவில்லை) பெண்ணொருவர் கடவுள் பேசுவது தனக்கு கேட்பதாக கூறி தன்னை தானே காயப்படுத்தி கொண்டுள்ளார்.
இதனை அடுத்து பெர்ன் நரம்பியல் மருத்துவர்கள் குறித்த பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளைக் கட்டி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முதலில் நோய் பாதிப்பால் பெண்ணுக்கு மன நோய் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நினைத்த நிலையில் சில முக்கிய விடயங்களையும் கண்டுப்பிடித்துள்ளனர்.
இது குறித்து உளவியல் நரம்பியல் பேராசிரியர் செபஸ்டின் வால்தர் கருத்து தெரிவிக்கையில்
பேசும் குரல் வெளிவருவதற்கு முக்கிய பகுதியாக இருக்கும் இடத்திலேயே பெண்ணுக்கு கட்டி உள்ளது.
அது தான் கடவுள் தன்னிடம் பேசுவது போன்ற மத உணர்ச்சியை அவருக்கு கொடுத்துள்ளது.
அத்துடன் கட்டி பெரிதாகும் பட்சத்தில் பெண்ணுக்கு மனச்சிதைவு நோயாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
மனநல நோயாளிகளுக்கு கடவுள் போன்ற குரல்கள் கேட்பது பொதுவானவை என்றாலும் இவர் விடயத்தில் இது புதிது என கூறியுள்ளார்.
எனினும் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.