செய்த கொலை ஒன்றை மறைப்பதற்காக ஊமையாக நடித்த நபர் கடைசியில் பேசும் திறனையே இழந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் உள்ள ஷீஜியாங்கில் வசித்து வந்தவர் ஸெங் (33). என்ற நபர் தன்னுடையை மனைவி மற்றும் மாமனாரை கடந்த 2005ம் ஆண்டு கொலை செய்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.
அதன் பின் தனது பெயரை மாற்றிக்கொண்ட நபர் வேறொரு மாகாணத்திற்கு சென்று அங்கு வேலை செய்துள்ளார்.
மேலும், தான் ஒரு ஊமை என நடித்து வந்தார். அதன்பிறகு, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையானார்.
இந்நிலையில், ஸெங்கை கடந்த 12 வருடங்களாகவே தேடி வந்த பொலிசார், கடைசியாக அவரை கண்டுபிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதோடு, தன்னால் பேசமுடியவில்லை என்றும் தான் ஒரு முட்டாள் அதனால் எதையும் தான் சொல்லப்போவதில்லை எனவும் பொலிசாருக்கு எழுதிக் காட்டியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பு செய்தால் தண்டனை நிச்சயமாக உண்டு.