டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 45 பேரை அ.தி.மு-கவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கெனவே டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த துணைமுதலமைச்சரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் பல அமைப்புகளைச் சேர்ந்த 45 பேர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளார்.