யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
முல்லைத்தீவு வட்டுவால் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஜெயனி ஆரம்பத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை ஆபத்தாக இருந்தமையினால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதே காய்ச்சல் காரணமாக முருகானந்தன் என்ற அந்த பெண்ணின் கணவர் 17 நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நோய் என்ன என்பதனை அடையாளம் காணுவதற்காக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர்கள் சிலர் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண நகர மக்கள் இந்த நோய் அமானுஸ்யமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
முல்லைத்தீவில் இருவர் உயிரிழ்ந்துள்ளமையினால் இந்த அச்சம் முல்லைத்தீவிற்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.