Loading...
முல்லைத்தீவு நகருக்கான பேருந்து நிலையம் 2018ம் ஆண்டில் அமைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏனைய உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதும், நகருக்கான பேருந்து நிலையம் அமைக்கப்படாது காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...
குறித் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலின் போதே இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன், பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நகரத்திட்டமிடலுக்கு அமைவாக மாதிரி கடைத்தொகுதி அமைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...