எனது கிராம மக்களின் நலனுக்காக சேவை செய்வதே எதிர்கால இலட்சியம் என மன்னார் முருங்கன் மகாவித்தியாலய மாணவியான சரோன் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையில் உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 9வது இடத்திiiயும் பெற்றுள்ளார்.
அத்துடன் உயிரியல் முறைமை தொழில் நுட்பவியல் துறையில் நிபுணத்துவ மிக்கவராக உயரவேண்டும் எனவும் தெரிவித்தள்ளார்.
குறித்த மாணவி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
உயிரியல் முறைமை தொழில் நுட்பவியல் துறையில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை அடைந்துள்ளேன்.
நான் முதலில் இந்த நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள், அதிபர், நண்பர்கள், குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள், அனைவருக்கும் எனது நன்றிகள். விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்துள்ளது.
உயிரியல் முறைமை தொழில் நுட்பவியல் துறையில் நிபுணத்துவ மிக்கவராக உயர்வதோடு எனது கிராம மக்களினதும் ஏனைய மக்களினதும் நலனுக்காக சேவை செய்வதே எனது எதிர்கால இலட்சியம்.
இதன் மூலம் எனது கிராம மக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர் முருங்கனைச் சேர்ந்த அல்போன்ஸ், யோகேஸ்வரி தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.