ஆட்சியில் இருந்து விரட்டியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாத அளவிற்கு உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவுட்டல் கருத்தரங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அடுத்த தலைவர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களை தென்னிலங்கை, பார்ப்பதாகவும் சுமந்திரன் அங்கு மேலும் கூறினார்.
இந்த சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.