உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் மூலம் தமிழ் மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரைகுறையான தீர்வுகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தின் இவ்வாறான முழுமை இல்லாத தீர்வுக்கு தமிழ் அரசியற் தலைமைகள் சில திட்டமிட்டு ஆதரவளித்து வருவதாகவும் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இந்த சதி நடவடிக்கைகளுக்காக நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் கோடிட்டு காட்டியுள்ளார்.
எனவே நடைபெறவுள்ள உள்ளூராச்சி தேர்தலில் பிரதேர ரீதியிலான அபிவிருத்திகளுக்கு முக்கியத்துவம் குறித்து சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.