சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற விரும்பவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கடுமையான சட்டதிட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதிய ஆண்டில் கூட்டாட்சி சட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
C residence அனுமதி பெற்றிருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமே அடுத்து குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்ப்படுகின்றது.
குறிப்பாக சுவிஸ் தேசிய மொழியில் தங்கள் திறனை எழுத்து தேர்வின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
தற்போது வரை சுவிஸில் மொழி ரீதியாக எந்த ஒரு திட்டங்களையும் வகுக்கவில்லை, அதிக மண்டலங்களில் பிரெஞ்சு மொழியே பேசப்படுவதால், இதுவரை வாய்வழி திறன்கள் மட்டுமே குடியேறிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு உதவின.
ஆனால், தற்போது குடியேறிகள் A2 நிலை எழுத்து தேர்வு மற்றும் B1 நிலை பேசும் திறனை நிரூபித்தால் மட்டுமே விசா வழங்க முடியும்.
குறிப்பாக, THURGAU மண்டலம் அரசாங்கம் நவம்பர் மாதம் தொடக்கம் குடியுரிமை பெறுவதற்கு B2 நிலை பேசும் திறன் வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மொழி தேர்வுகள் நடக்கும் என்றும், விண்ணப்பதாரர் அதிகபட்சம் 250 பிராங்குகள் செலவழிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை சுவிஸ் தேசிய மொழியை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் படித்திருந்தால் மொழி தேர்வை எழுத வேண்டிய அவசியம் இருக்காது.
அத்துடன் ஜனவரி தொடக்கம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே குடியுரிமை பெறும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.