சுவிட்சர்லாந்தின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இக்னாசியோ காசிஸ் தனது 90 சதவீதமான டுவீட்களை அழித்துள்ளார்.
நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் அதற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை முன்னர் டுவிட்டரில் வெளியிட்டதாலேயே அதை காசிஸ் அழித்துள்ளதாக தெரிகிறது.
டுவிட்டரில் கடந்த 2011 மார்ச் இணைந்த காசிஸ் இதுவரை 580 டுவீட்கள் பதிவிட்டுள்ளதாக ஜூரிச் பத்திர்க்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 90 சதவீத டுவீட்களை அவர் அழித்துவிட்டதால் டுவீட்களின் எண்ணிக்கை 43-ஆக குறைந்துள்ளது.
எடுத்துக்காட்டுக்கு கடந்த 2016-ல் இத்தாலின் பேண்ட் என்ற இசைக்குழு தனது 50 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியதை டுவிட்டரில் காசிஸ் பதிவிட்டார்.
டுவிட்டரை அடுத்து தனது பேஸ்புக் பக்கத்திலும் தேவையில்லாத பதிவுகளை காசிஸ் விரைவில் நீக்கவுள்ளார்.