Loading...
ஜனநாயக ஆட்சிக் காலத்தில் படையெடுத்து வந்து ஆட்சி செய்ய நிற்கும் ரஜினியை எதிர்த்து நாங்கள் அரசியல் செய்வோம் என, நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சீமான் மேற்படி தெரிவித்துள்ளார்.
Loading...
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டை அந்நியர்கள் ஆட்சி செய்ய நாம் இடமளிக்க மாட்டோம்.
ரஜினி அரசியலுக்கு வந்து ஒரு தத்துவத்தைக்கூட முன்வைக்க மாட்டார்.
இவர்கள் போன்றோரால் இன்றைய தலைமுறையும் தலைகீழாகிவிட்டது’ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...